ஆட்டோ சங்கரின் தம்பி மோகனுக்கு ஆயுள் தண்டனை உறுதி
சென்னை: கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் தம்பி ஆட்டோ மோகனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
ஆட்டோ சங்கர் கைது செய்யப்பட்ட போது அவருடன் சேர்த்து கைதானவர் ஆட்டோ மோகன். அவருடன் செல்வராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும் பின்னர் தப்பிச் சென்று விட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 1996ம் ஆண்டு இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து இருவர் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இத்தனை காலமாக நிலுைவயில் இருந்த இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சொக்கலிங்கம், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனயை உறுதி செய்து உத்தரவிட்டது. மோகன், செல்வராஜின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆட்டோ சங்கர் தனது காதலிகள் மற்றும் துரோகம் செய்தவர்களை கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்து வைத்த சம்பவம் தமிழகத்தை ஒரு காலத்தில் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
