'கோத்ரா': நானாவதி அறிக்கை போலி-டெஹல்கா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கோத்ரா சம்பவம் குறித்து விசாரித்த நானாவதி கமிஷன் அறிக்கை போலியானது. சாட்சிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர் என்று டெஹல்கா ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் கூறுகையில், கோத்ரா ரயில் விபத்து சம்பவம் திட்டமிட்ட சதிச் செயல் அல்ல. தற்செயலான விபத்துதான் அது.
நானாவதி கமிஷன் விசாரணையின்போது போலீஸ் தரப்பு சாட்சியங்கள் லஞ்சம் கொடுக்கபப்ட்டுள்ளனர். பொய் சொல்லுமாறு அவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆறு மாத கால விசாரணை முற்றிலும் கற்பனையான, திரித்து கூறப்பட்ட தகவல்களை கொண்டதாக உள்ளது. அவர்கள் கூறும் சாட்சிகள் எல்லாம் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டவர்கள். உண்மைகளை அவர்கள் மறைத்து விட்டனர் என்று கூறியுள்ளார் தேஜ்பால்.












Click it and Unblock the Notifications