முதல்வர் விழாவிலேயே மின் தடை - 3 அதிகாரிகள் இடமாற்றம்!
திருச்சி: திருச்சியில் கடந்த 21ம் தேதி அன்று கலைஞர் அறிவாலயம் திறக்கப்பட்ட விழாவின்போது மின் தடை ஏற்பட்டது தொடர்பாக 3 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அன்று நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு கலைஞர் அறிவாலயத்தைத் திறந்து வைத்தார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக மின்சாராத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்பட மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பேச்சுப் போட்டி நடைபெற்றுக் கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக திடீரென மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் விழாவில் கலந்து கொண்டவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு உடனே சரி செய்யப்பட்டது.
முதல்வர் விழாவிலயே மின் தடை ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மின் தடைக்கு காரணமாக இருந்த கோட்ட பொறியாளர், விருத்தாசலம் கூடுதல் கோட்ட பொறியாளர், விருத்தாசலம் உதவி பொறியாளர் ஆகிய மூன்று மின் வாரிய அதிகாரிகள் திருச்சியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications