கணவர் வீடு சென்ற புதுமணப் பெண் மாயம்
கடையநல்லூர்: கணவன் வீட்டுக்கு புறப்பட்ட புதுமணப்பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் டீக்கடை நடத்தி வருபவர் மாரியப்பன். இவருக்கும் மேலக்கடையநல்லூர் பஜனை மடம் தென்வடல் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் பேச்சியம்மாள் என்ற பிரேமா என்பவருக்கும் கடந்த ஒன்றாம் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி மாரியப்பன் தனது மனைவியுடன் கடையநல்லூர் வந்துள்ளார். அப்போது பிரேமாவிற்கு உடல்நலம் சரியில்லாததால் அவரை கடையநல்லூரில் தாய் வீட்டிலேயே விட்டுவிட்டு வாசுதேவநல்லூருக்கு திரும்பிவிட்டார்.
இதனையடுத்து கண்வலியால் அவதிப்பட்டு வந்த பிரேமாவை தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை முடிந்து மறுநாள் அவரை தனியாக வாசுதேவநல்லூருக்கு பஸ்சில் அவரது பெற்றோர் அனுப்பி வைத்தனர்.
ஆனால் பிரேமா கணவன் வீட்டிற்கு இதுவரை வந்து சேரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் மாரியப்பனும் பிரேமாவின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பிரேமாவின் தந்தை ஆறுமுகம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
காணாமல் போன அன்று பிரேமா 10 பவுன் நகை அணிந்திருந்தார். நகைக்கு ஆசைப்பட்டு அவர் கடத்தப்பட்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். புது மணப்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications