என்.கே.கே.பி. ராஜா ஆள் கடத்தல் வழக்கு: 4 பேர் கைது
ஈரோடு: ஆள் கடத்தல் வழக்கில், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் ஆதரவாளர்கள் 3 பேர் உள்பட நான்கு பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் உள்ளது கல்லாங்குத்து தோட்டம். இங்கு வசிப்பவர் பழனிச்சாமி. விவசாயி. இவரது மனைவி மலர்விழி, மகன் சிவபாலன், தம்பி குகமணி ஆகியோரை முன்னாள் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் கடத்தி சென்றதோடு, அவர்களது வீடுகளையும் தரைமட்டமாக்கியதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் ராஜா அமைச்சர் பதவியை இழந்தார்.
இந்த நிலையில் பழனிச்சாமியின் தந்தை சின்னசாமி இறந்து போனதற்கு காரணமாக இருந்ததாக முன்னாள் அமைச்சர் ராஜா உள்பட அவரது ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி உத்தரவிட்டது. அதன் பேரில் சிபிசிஐடி எஸ்பி அருண் தலைமையிலான தனிப்படை செப்டம்பர் 21 ம் தேதி முதல் பெருந்துறையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையைத் தொடர்ந்து, பெருந்துறை நகர திமுக செயலாளர் கோபிநாத், ஈரோடு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பவானி ரெங்கசாமி, ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மற்றும் பெருந்துறையை சேர்ந்த பாலாஜி ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இவர்களை பெருந்துறை மாஜிஸ்திரேட் நீதிபதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
--
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications