கூட்டணி: விஜயகாந்த்தை சந்திப்பேன்-தா.பாண்டியன்
தஞ்சாவூர்: தேமுதிகவுடன் தேர்தல் கூட்டணி வைப்பது குறித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துடன் பேசிய பின்பு முடிவு செய்யப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
தஞ்சை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அக்டோபர் 2ம் தேதி சென்னையிலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இலங்கை தமிழரின் உயிர் பாதுகாப்பு, உரிமைப் பாதுகாப்பு கோரிக்கையை முன்வைத்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.
இலங்கை அரசு, வன்முறையில் ஈடுபட்டு தமிழ் இன மக்களை கொன்று தீர்க்க முயற்சி செய்கிறது. இலங்கை அரசு தமிழ் இனத்தையே அழிக்கும் செயலில் இறங்கி உள்ளது. எனவே, உடனே போரை நிறுத்தி, அரசியல் தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கையை இந்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவி, பொருளுதவி செய்யக் கூடாது.
இலங்கையில் அகதிகளாக உள்ள 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களுக்கு இந்திய அரசு நேரடியாகவோ, செஞ்சிலுவை மூலமாகவோ உணவு, உடை, மருந்து ஆகியவற்றை உடனே அனுப்ப வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், விஜயகாந்த்தை சந்தித்துள்ளனர். நாங்களும் விஜயகாந்துடன் சந்தித்து பேசிய பின்பு இறுதி முடிவை இரு கட்சிகளும் இணைந்து எடுப்போம் என்றார்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications