கான்டலீசா ரைஸின் இந்திய பயணம் திடீர் ஒத்திவைப்பு
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸின் இந்திய பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கான்டலீசா ரைஸ், அக்டோபர் 3ம் தேதி ஒரு நாள் பயணமாக இந்தியா வருவார் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குள் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்து விடும் என்பதால் அவரது பயணத்தின்போது அணு ஒப்பந்தத்தில் இரு நாட்டு அமைச்சர்களும் கையெழுத்திடக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ரைஸின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. தற்போது பிரணாப் முகர்ஜி ஐந்து நாள் அமெரிக்க பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் 3ம் தேதிதான் இந்தியா திரும்புகிறார். எனவேதான் ரைஸின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரணாப் முகர்ஜி டெல்லி திரும்பிய பின்னரே ரைஸ் இந்தியா வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications