ஐசிஐசிஐ குறித்து பெரும் புரளி: நம்ப வேண்டாம்-ஆர்பிஐ

அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவால் இந்தியாவிலும் ஒரு வித பதட்டம் காணப்படுகிறது. குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் குறித்து அவ்வப்போது திவால் பீதி கிளம்பி வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந் நிலையில் ஐசிஐசிஐ வங்கி பெரும் சிக்கலில் இருப்பதாக இன்று மீண்டும் புரளி பரவியுள்ளது. குறிப்பாக இன்று காலை கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் ஐசிஐசிஐ வங்கி குறித்து பெரும் வதந்தி பரவியதால் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் மையங்களிலும் குவிந்தனர்.
இதைத் தொடர்ந்து காமத் வெளியிட்ட அறிக்கையில், ஐசிஐசிஐ வங்கியின் நிதி நிலை குறித்து தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட இடங்களிலிருந்துதான் இந்த வதந்திகள் கிளம்புகின்றன.
ஆனால் இந்த வதந்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை, அவதூறை ஏற்படுத்தும் நோக்கில் வெளியாகும் வதந்திகள் இவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐசிஐசிஐ வங்கி ஸ்திரமுடன் உள்ளதை என்பதை நிரூபிக்கும் வகையிலான தகவல்களையும் காமத் வெளியிட்டுள்ளார்.
- 2007ம் ஆண்டு ஜூன் மாதம் ஐசிஐசிஐ வங்கி ரூ.20 ஆயிரம் கோடி முதலீடுகளுடன் இருந்தது. இது அதன் முதலீட்டை விட இருமடங்கு அதிகமாகும். ரூ. 47 ஆயிரம் கோடி அளவுக்கு பணப்புழக்கத்தில் ஐசிஐசிஐ வங்கி உள்ளது.
- குறைந்தபட்ச கையிருப்பு அளவு 9 சதவீதம்தான். ஆனால் ஐசிஐசிஐ வங்கியிடம் 13.4 சதவீத அளவுக்கு கையிருப்பு உள்ளது. இதன் மூலம் வங்கியின் நிதியிருப்பு மிகவும் ஸ்திரமாக இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
- ஐசிஐசிஐ வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 4 லட்சத்து 84 ஆயிரம் கோடியாகும்.
- ஐசிஐசிஐ வங்கி லாபத்துடன் இயங்கி வருகிறது. வரி போக இதன் லாபத் தொகை ரூ. 4,158 கோடியாகும். இந்த ஆண்டின் முதல் காலிறுதியில் ரூ. 728 கோடி அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளது என்று காமத் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார்.
ஆர்பிஐ தரும் நம்பிக்கை:
ஐசிஐசி வங்கியின் நிதி நிலைமை வலுவாகவே உள்ளது என்று ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளது. வதந்திகள் பரவியுள்ளதால் ஏடிஎம் மையங்களிலும், வங்கிக் கிளைகளிலும் பெருமளவிலான வாடிக்கையாளர்கள் குவிந்து பணத்தை எடுத்து வருவதால், நிதி நிலையை சமாளிக்க போதுமான பணத்தை ஐசிஐசிஐ வங்கிக்கு வழங்கியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications