தங்கக் காசு மோசடி-தலைமறைவு தொழிலதிபர் கைது
சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் காசு மோசடியில் தலைமறைவாக இருந்து வந்த பெரோஸ் கான் என்கிற தொழிலதிபர் கைதாகியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் கோல்டு குவெஸ்ட் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் எம்.எல்.எம். பாணியில், தங்கக் காசு திட்டத்தை அறிவித்து ஆயிரக்கணக்கானவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து புகார்கள் குவியவே, நிறுவனத்தின் நிர்வாகி புஷ்பம் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். நிறுவனத்தின் ரூ.180 கோடி சொத்துக்களும் முடக்கப்பட்டது. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட புஷ்பம் சமீபத்தில் விடுதலையானார். மற்றவர்களும் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளனர்.
நிறுவனத்தின் ஏஜென்டாக செயல்பட்டு பலரை சேர்த்து விட்ட பத்மா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய பெரோஸ்கான் என்கிற தொழிலதிபர் நான்கு மாதங்களாக தலைமறைவாக இருந்தது வந்தார். அவர் தற்போது சிக்கியுள்ளார்.
கூடுதல் எஸ்.பி. சந்திரபாசு தலைமையிலான தனிப்படை போலீஸார் அவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அவர்களது பொறியில் சிக்கிய பெரோஸ்கான் அடையாறில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீ சார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அவர், தங்ககாசு மோசடியில் ரூ.20 கோடிக்கு மேல் கமிஷனாக சுருட்டி இருப்பதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பெரோஸ்கானுக்கு மைலாப்பூரில் ஏஞ்சல் என்ற பெயரில் ஜவுளிக்கடை உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீடும் உள்ளது. இந்த சொத்துக்கள் அனைத்தும் தங்க காசு மோசடி மூலம் வாங்கி குவித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கோடிக்கணக்கான சொத்துக் களை போலீசார் முடக்கி உள்ளனர். வீட்டில் நின்ற சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications