மதுரை தேர்தல் முடிவு-வெளியிட தடை நீட்டிப்பு
மதுரை: மதுரை 52வது வார்டு இடைத்தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்ற கிளை நீட்டித்துள்ளது.
மதுரை மதுரை மாநகராட்சியின் 52வது வார்டு இடைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உதயசூரியன் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், மதுரை மாநகராட்சி தேர்தலில் 52வது வார்டில் நடைபெற்ற தேர்தலின் போது திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினர். திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இது குறித்த புகார் தேர்தல் பார்வையாளர் கோபாலிடமும், மதுரை போலீஸ் கமிஷனர் நந்தபாலனிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை தேர்தல் ஆணையம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. எனவே, இந்த தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதேபோல அதிமுக தரப்பிலும் தேர்தல் வன்முறை குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கண்ணன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணை வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். அதன் பேரில் இம்மாதம் 20ம் தேதிக்கு நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தனர். அத்துடன் இடைத்தேர்தல் முடிவுகளை வெளியிடவும் தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications