மே. வங்க முதல்வருடன் ரத்தன் டாடா நாளை சந்திப்பு
கொல்கத்தா: நானா கார் தொழிற்சாலைத் திட்டம் குறித்து டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்ஜியை நாளை சந்தித்துப் பேசவுள்ளார்.
சிங்கூரில் அமைந்துள்ள டாடாவின் நானோ கார் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பெரும்பாலானவற்றை விவசாயிகளுக்கு திரும்பித் தர வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கோரி வருகிறார். இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்ைதகளில் உடன்பாடு ஏற்பட்டதைப் போல தோன்றினாலும், மமதாவின் நிலையில் மாற்றம் இல்லாததால், நிலைமை மேலும் மேலும் சிக்கலானது.
இதையடுத்து சிங்கூரைக்காலி செய்ய முடிவு செய்தது டாடா. இதைத் தொடர்ந்து அங்குள்ள தொழிற்சாலையை காலி செய்யும் வேலையில் அது இறங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து சிங்கூரை விட்டுப் போக வேண்டாம் என ரத்தன் டாடாவுக்கு, மேற்கு வங்க முதல்வர் பட்டசார்ஜி கோரிக்கை விடுத்தார்.
இந்தப் பின்னணியில், நாளை ரத்தன் டாடா, பட்டசார்ஜியை சந்தித்துப் பேசவுள்ளார். இதுகுறித்து பட்டசார்ஜி கூறுகையில், நானோ கார் தொழிற்சாலை குறித்து அனைத்து அம்சங்களையும் டாடாவுடன் விவாதிக்கவுள்ளேன்.
தற்போது சிங்கூர் திட்டம் பெரும் குழப்பத்தில் உள்ளது. அதை சரி செய்யும் வகையில் பேச்சு அமையும் என்றார்.
நான்கு நாட்களுக்கு முன்புதான் டாடாவுக்கு, பட்டசார்ஜி கடிதம் எழுதி, சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications