உண்ணாவிரதப் போராட்டம்: சிபிஐ மீது சரத் தாக்கு
சென்னை: அதிகார மையத்தில் இருந்தபோது முயற்சி செய்யாமல், ஆதரவை விலக்கிக் கொண்ட பிறகு இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் நடத்துவது தேர்தல் கூட்டணிக்கான முயற்சி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சாடியுள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
இதுகுறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தாங்கள் எந்தெந்த காலத்தில் என்னென்ன செய்தோம், அவர்களுககு உண்மையான ஆதரவாளர்கள் யார் என்றெல்லாம் பட்டியலிட்டு கூறிக் கொண்டிருக்கும் நேரம் இதுவல்ல.
கடந்த 4 ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆதிகார மையத்துக்கு அருகில் இருந்து ஆலோசனை தெரிவித்து வந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அப்போது, இலங்கை தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்துவது நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதற்கான முயற்சிக்கு இலங்கை தமிழர் பிரச்சனையை களமாக பயன்படுத்திக் கொள்கிறதோ என் சந்தேகம் எழுகிறது.
இலங்கை தமிழர் பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலோடு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு செவிசாய்க்காமல் இருந்தால், ஒட்டுமொத்த தமிழக மக்கள் சக்தியும் அரசியல் வேறுபாடுகளை தாண்டி ஒருங்கிணைந்து முடிவு கிடைக்கும் வரை போராட வேண்டும்.
இதைவிடுத்து தனித்தனியாக நடத்தப்படும் போராட்டங்கள் வெறும் அரசியல் பரபரப்புகளையும், கூட்டணி பற்றிய பேச்சுகளை மட்டுமே ஏற்படுத்தி போராட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்துமே தவிர, நிரந்தர தீர்வு காண வழிவகுக்காது.
இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தனித்தனியாக நடத்தப்படும் போராட்டங்கள் அரசியல் பரபரப்பையும், எண்ணிக்கையையும் உயர்த்துமே தவிர நிரந்தர தீர்வு காண வழிவகுக்காது என்று சரத்குமார் கூறியுள்ளார்.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications