பணி நிரந்தரத்தில் தாமதம் - குமுறும் டாஸ்மாக் ஊழியர்கள்
சேலம்: பணி நிரந்தரம் செய்யாமல் அரசு காலம் கடத்தி வருவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிஐடியூ சார்பில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 7,371 டாஸ்மாக் கடைகளில் 34,000 ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்திற்கு நியமனம் செய்யப்பட்டதால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு முடித்துக் கொள்ளப்பட்டது.
ஆனால் ஒப்பந்த தொழிலாளர்கள் என்று கூறி பணிப் பாதுகாப்பை அரசு கேள்விக்குறியாக்கி உள்ளது. தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டப்படி 2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித்த நாளில் இருந்து அவர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது.
ஆனால், பணி நிரந்தரம் செய்யாமல் காலம் கடத்துவது சட்டவிரோதம் ஆகும். தொழிற்சங்கம் ஆரம்பிக்கும்போது தொழிலாளர்கள் மீது அரசு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கிறது. எங்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications