ஈழத் தமிழர்களைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை: தங்கபாலு
சென்னை: ஈழத் தமிழர்களைக் காக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், இலங்கைத் தமிழர்களின் நலன் மீது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மிகுந்த அக்கறையுடன் உள்ளது. ஆனால் மத்திய அரசு ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அமைதி காப்பதாக சில கட்சிகள் அவதூறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தமிழர்களின் நலன் காப்பதில் காங்கிரஸ் எப்போதும் முன்னணியில் தான் இருந்து வருகிறது. இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக ராஜீவ்காந்தி என்ற மாபெரும் தலைவரை இழந்த கட்சி காங்கிரஸ்.
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதிலிருந்து காக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அனைத்து மீனவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிக்கவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண அனைவரும் முயல வேண்டும்.
அப்படி அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டால் அவர்களை எனது தலைமையில் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இலங்கை நிலவரத்தை விளக்கி, தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தீவிரம் காட்ட வலியுறுத்த உதவுவேன்.
இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியாவால் தலையிட முடியாது. அதேசமயம், தமிழர் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு ஏற்பட இந்தியாவால் உதவ முடியும் என்றார் தங்கபாலு.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications