ஹிதேந்திரன் அஸ்தி கன்னியாகுமரியில் கரைப்பு
கன்னியாகுமரி: உடல் உறுப்பு தானத்தால் இறவாப் புகழ் பெற்றுள்ள ஹிதேந்திரனின் அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது.
சென்னையை அடுத்துள்ள திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் அசோகன் - புஷ்பாஞ்சலி தம்பதியினரின் மகன் ஹிதேந்திரன் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தார். சிகிச்சை பெற்று வந்த அவர் மூளை செயலிழந்தது. இதையடுத்து அவரது உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் தீர்மானித்தனர்.
அதன்படி ஹிதேந்திரனின் இதயத்ைத எடுத்து பெங்களூரைச் சேர்ந்த சிறுமி அபிராமிக்கு பொருத்தினர். பிற உடல் உறுப்புகளும் மற்றவர்களுக்கு பொருத்தப்பட்டன.
ஹிதேந்திரனின் பெற்றோர் செய்த இந்த மிகப் பெரிய செயல் அனைவரின் இதயங்களையும் உருக்கிவிட்டது. முதல்வர் கருணாநிதி ஹிதேந்திரன் பெற்றோரைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டார். அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் ஹிதேந்திரன் வீடு தேடிச் சென்று அசோகன் தம்பதியைப் பாராட்டி வாழ்த்தினர்.
ஹிதேந்திரன் வீடு உள்ள தெருவுக்கு அவரது பெயரை வைக்க நகராட்சி தீர்மானம் போட்டது. ஹிதேந்திரன் குடும்பத்தினருக்கு பல பகுதிகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன.
இந்த நிலையில், ஹிதேந்திரனின் அஸ்தியை கன்னியாகுமரியில் கரைக்க அசோகன் குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று ரயிலில் குமரிக்கு வந்தனர். காந்தி மண்டபத்திலிருந்து சங்கிலித்துறை கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, 16 கால் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜோதி நிர்மலா, பொதுமக்கள் உள்ளிட்டோர் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் முக்கூடல் சங்கமத்தில் அஸ்தி கரைக்கப்பட்டது.
பத்திரகையாளர்கள் அஞ்சலி:
ஹிதேந்திரனின் உருவப்படம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் ஹிதேந்திரனின் இதயம் பொருத்தப்பட்ட சிறுமி அபிராமியின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரபல இருதய மருத்துவர் செரியன் கலந்து கொண்டு ஹிதேந்திரனின் உருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இதில் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி ஹிதேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
டாக்டர் செரியன் பேசுகையில், உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து பொதுமக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்துவதில் பத்திரிகைகளுக்குத்தான் மிகுந்த பொறுப்பும், கடமையும் உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் பலர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினார்கள்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications