டெல்லியில் கான்டலீசா ரைஸ் - ஒப்பந்தம் கையெழுத்தாகாது?

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து விட்டது. இருப்பினும் இந்த ஒப்பந்தத்தில், தடையற்ற எரிபொருள் சப்ளை குறித்து அமெரிக்க தரப்பில் உத்தரவாதம் எதுவும் இடம் பெறாதது இந்தியாவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவிடம் பேசி தெளிவுபடுத்திய பின்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு நிர்வாக ரீதியிலான பல விஷயங்கள் பேசி தீர்க்கப்பட வேண்டியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கான்டலீசா ரைஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா கிளம்புவதற்கு முன்பு வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அணு ஆயுத சோதனை தொடர்பாக ஹைட் சட்டத்தில் உள்ள அம்சங்களை அமெரிக்கா பின்பற்றும். அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பல நிர்வாக ரீதியிலான விஷயங்கள் பேசப்பட வேண்டியுள்ளது.
2 நாட்களுக்கு முன்புதான் ஒப்பந்தம் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட அதிபர் புஷ் ஆர்வத்துடன் உள்ளார். விரைவில் அது நடைபெறும்.
இந்த ஒப்பந்தம் நனவாக பாடுபட்ட இந்திய - அமெரிக்க சமூகத்தினர், அமெரிக்க - இந்திய வர்த்தக சமூகத்தினர், தூதர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரையும் புஷ் நிர்வாகம் பாராட்டுகிறது.
இரு தரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தம் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பது குறித்து புஷ் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
இந்தியாவுடன் மிகப் பெரிய உறவு அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது. எனவே இந்த உறவின் மூலம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதை விரிவுபடுத்திக் கொள்ள தேவைப்படும் நடவடிக்கைகளை நாங்கள் விரிவாக ஆலோசித்து வருகிறோம். நிர்வாக ரீதியிலான பல முக்கிய அம்சங்கள் இன்னும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளது என்றார்.
ஆனால் தடையற்ற எரிபொருள் சப்ளை குறித்து ரைஸ் எதுவும் குறிப்பிடவில்லை. அதிகாரப்பூர்வமான உத்தரவாதத்தை அமெரிக்கா தராததால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவசரம் காட்ட வேண்டாம் என இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தப் பின்னணியில் இன்று ரைஸ் டெல்லி வந்து சேர்ந்தார். 2 நாள் பயணமாக அவர் டெல்லி வந்துள்ளார். சிறப்பு விமானம் மூலம் காலையில் டெல்லி வந்து சேர்ந்த ரைஸுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரைஸ் டெல்லி வந்துள்ளபோதிலும், அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்டோரை ரைஸ் சந்திக்கவுள்ளார்.
பிரதமருடனான ரைஸ் சந்திப்பின்போது தடையற்ற எரிபொருள் சப்ளை குறித்து பிரதமர் விவாதிப்பார் எனத் தெரிகிறது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications