பெங்களூரில் சிவராஜ் பாட்டீல் - ஆளுநருடன் ஆலோசனை
பெங்களூர்: கர்நாடகத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த வன்முறை குறித்து கர்நாடக ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூருடன், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
கர்நாடகத்தில் சமீபத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப் பெரிய வன்முறை நடந்தது. இதுதொடர்பாக விரைவான நடவடிக்ைக எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக கர்நாடக போலீஸார் மீதும், அரசு மீதும் குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்தப் பின்னணியில் இத்தகைய சம்பவத்தால் நாட்டின் கெளரவம் கெட்டுப் போய் விட்டதாக கூறியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்றுஇரவு சிவராஜ் பாட்டீல் பெங்களூர் வந்தார். புட்டபர்த்தி வந்த அவர் அப்படியே பெங்களூருக்கு பயணித்தார். ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது மாநில போலீஸ் துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யாவும் உடன் இருந்தார்.
கடந்த ஜூலை மாதம் முதல் கர்நாடகத்தின் பல பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 29 வழிபாட்டுத் தலங்கள், பிரார்த்தனைக் கூடங்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடக மாநில பஜ்ரங் தள ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications