தூத்துக்குடி அருகே வழிப்பறி கொள்ளையர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வழிப்பறி செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன்கோவில் காம்பவுண்ட் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், டிரைவர். கடந்த மாதம் 29ம் தேதி இவர் ஏரல் காந்தி சிலை ரோட்டில் நின்றுக் கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இருவர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.100 பறித்து சென்றனர். இதுகுறித்து ஏரல் போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார்.

இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது ஏரல் புதுமனை பஸ் நிலையம் அருகில் பைக்குடன் இரண்டு பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்ததை பார்த்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள் இருவரும், நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணபுரம் சிவன்கோயில் தெருவை சேர்ந்த கடற்கரையாண்டி, ராஜகோபால் என்றும், வேன் டிரைவர் ராஜேந்திரனிடம் பணம் பறித்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி முத்தையா மற்றும் போலீசார் இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் நகை பறித்தது தெரிய வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+