பிரதமரை விமர்சிக்க ஜெ.வுக்கு அருகதை கிடையாது: தங்கபாலு
சென்னை: இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்ைக எடுத்து வருகிறது. இதில், பிரதமரை விமர்சித்துப் பேச அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு அருகதை கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் ெதரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியும், அதில் மத்திய அரசு தலையிட்டு தமிழர்களுடைய பாதுகாப்புக்கும், வாழ்வுரிமைக்கும் உரிய நடவடிக்கையை எடுக்க உதவிடுமாறும் பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த செப்டம்பர் 3ந் தேதி புதுடெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நானும் கலந்து கொண்டு இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்கு பாதுகாப்பு வேண்டும், தமிழர்களுக்கு எதிரான செயல்பாட்டுக்கு நாம் உதவிடக்கூடாது என வேண்டுகோள் விடுத்தேன்.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது அதிபர் ராஜபக்சேவிடம் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தமிழர் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார்.
ராஜீவ்காந்தியின் இழப்பிற்கு பிறகும் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் நலனில் காங்கிரஸ் கருணையோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை நாடு அறியும். அது தெரிந்தும் இந்த விஷத்தில், மத்திய அரசு செயல்படவில்லை என்று சொல்பவர்கள் ஆதாரத்தைக் காட்டி விவாதிக்க தயாரா?
பிரதமருக்கு தந்தி அனுப்பி வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது வரவேற்புக்குரியது. இது அவருடைய கருத்து. வரவேற்கிறோம். அதேபோல ஒவ்வொரு கட்சியும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்.
ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜெயலலிதா விமர்சித்துப் பேசுகிறார். இது கண்டனத்துக்குரியது. அப்படிப் பேச அவருக்கு அந்தஸ்தோ, அருகதையோ இல்லை.
நாட்டின் பிரதமர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் யாருக்கும் தாசனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போதுமே இந்திய மக்களின் தாசனாகத்தான் இருக்கிறார் என்றார் அவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications