சென்னையில் மேலும் 14 ஏசி வோல்வோ டவுன் பஸ்கள் அறிமுகம்
சென்னை: சென்னை மாநகரில் குளு குளு வசதி செய்யப்பட்ட வோல்வோ சொகுசுப் பேருந்துகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை நகரில் குளு குளு வசதியுடன் கூடிய 10 வோல்வோ பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று மேலும் 14 பேருந்துகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 7 வழித் தடங்களில் இவை இயக்கப்படும்.
அண்ணா சதுக்கத்தில் நடந்த விழாவில், அமைச்சர் ஸ்டாலின் 14 பேருந்துகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒரு பஸ்சை சிறிது தூரம் அவரே ஓட்டினார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேருந்துகள் இயங்கும் வழித் தடங்கள்.
தி.நகர் -கேளம்பாக்கம், திருவான்மியூர் - தாம்பரம் கிழக்கு, பிராட்வே - திருப்போரூர், பெரம்பூர் - திருவான்மியூர், கோயம்பேடு பஸ் நிலையம் - கேளம்பாக்கம், ஆவடி - திருவான்மியூர், தி.நகர் - ஸ்ரீபெரும்புதூர்.
ஒரு வழித்தடத்துக்கு 2 பஸ்கள் வீதம் 14 பேருந்துகளும் இயக்கப்படும்.












Click it and Unblock the Notifications