படிப்புச் செலவுக்காக நகை திருடிய மாணவன் கைது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: படிப்புச் செலவுக்காக பக்கத்து வீட்டில் நகை, பணம் திருடிய பாலிடெக்னிக் மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம், அய்யங்கார்குளத்தைச் ேசர்ந்தவர் முரளி. அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ரூ 1 லட்சம் மதிப்புள்ள நகை, மற்றும் பணம் ஆகியவை சில நாட்களுக்கு முன்பு திருடு போனது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது முரளி மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது தான்தான் நகை, பணத்தை திருடியதாக அவர் ஒத்துக் கொண்டார்.
படிப்புச் செலவுக்கு பணம் தேவைப்பட்டதாகவும், அதனால்தான் திருடி விட்டதாகவும் மாணவர் முரளி ஒப்புக் கொண்டார். இதையடுத்து முரளியை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications