பங்குச் சந்தையில் பெரும் சரிவு - எடுத்த எடுப்பில் 1088 புள்ளி வீழ்ச்சி!!
மும்பை: சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக இன்று எடுத்த எடுப்பிலேயே பங்குச் சந்தை அதலபாதாளத்தில் விழுந்தது. தொடர்ந்து இந்த வீழ்ச்சி நிலையே நிலவுகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று எடுத்த எடுப்பிலேயே 1088 புள்ளிகள் சரிந்தது சென்செக்ஸில். முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் தலைமேல் கைவைத்தபடி உட்கார்ந்துவிட்டனர்.
சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீராகத் தொடங்கியது. ஆனாலும் இன்னும் எதிர்மறை நிலை முற்றிலுமாக விலகவில்லை. காலை 11 மணி அளவில் சென்செக்ஸ் 696 புள்ளிகள் குறைந்து காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 158 புள்ளிகள் குறைந்து காணப்பட்டது.
தற்போது சென்செக்ஸ் 10632 புள்ளிகளாகவும், நிப்டி 3358 புள்ளிகளாகவும் உள்ளது.
ஐசிஐசிஐ வங்கி,ரிலையன்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் எச்டிஎப்சி போன்ற முதல் நிலைப் பங்குகள் கடும் சரிவுக்குள்ளாகியுள்ளன.












Click it and Unblock the Notifications