ஜப்பான், சீனாவுக்கு பிரதமர் 21ம் தேதி செல்கிறார்
டெல்லி: ஜப்பான் மற்றும் சீனாவுக்கு அரசு முறை பயணமாக வரும் 21ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் புறப்படுகிறார்.
வரும் 21ம் தேதி அரசு முறை பயணமாக ஜப்பான் மற்றும் சீன நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மன்மோகன்.
முதலில் மூன்று நாள் பயணமாக ஜப்பான் செல்லும் மன்மோகன், அங்கு புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் டரோ அஸோவை சந்தித்து பேசுகிறார். இரு நாடுகளுக்கிடையிலான உறவு, வர்த்தகம், பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேசுகின்றனர்.
அந்நாட்டு மன்னர் அகிஹிட்டோவையும் மன்மோகன் சந்தித்து பேசுகிறார். பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்துகின்றனறர். இது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
கடந்த மாதம் வரை வெளியுறவு அமைச்சராக இருந்த அஸோ, பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளரா. இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படுத்துவதில் ஆர்வம் கொண்டவராவார்.
ஜப்பான் பயணத்தைத் தொடர்ந்து 5 நாள் பயணமாக சீனாக்கு செல்கிறார் மன்மோகன். அங்கு 24, 25ம் தேதிகளில் நடக்க உள்ள 7வது ஆசிய-ஐரோப்பிய உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாசாரம், நிலையான வளர்ச்சி குறித்து விவாதிக்கபட உள்ளது.
இதையடுத்து இந்திய-சீன உறவு குறித்து அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபாவ் மற்றும் தலைவர்களுடனும், மற்ற நாட்டு தலைவர்களுடனும் மன்மோகன் பேசுகிறார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications