வங்கி சேமிப்புகள் - முதலீடுகள் பத்திரமாக உள்ளன: ப.சிதம்பரம்
டெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் மக்களின் சேமிப்புப் பணமும், முதலீடுகளும் பத்திரமாக உள்ளன. எனவே உலகளாவிய நிதி நெருக்கடி குறித்து இந்திய மக்கள் கவலைப்படத் தேவையில்ைல என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை மிகவும் உறுதியாக உள்ளது. நமது வங்கிகளில் உள்ள சேமிப்புகள் அனைத்தும் முழுமையாக பாதுகாப்பாக உள்ளது.
பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டிருப்பது உண்மைதான். சுணக்கம் காணப்படுவதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் உலகளாவிய நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான பாதிப்புதான் இது.
இதை சமாளிக்க ரிசர்வ் வங்கி பல நடவடிக்ைககளை எடுத்துள்ளது. தேவைப்பட்டாலும் மேலும் சில நடவடிக்ைககளை எடுக்கும்.
இந்த நிதி நெருக்கடி புயலை நமது நாடு மிக சுலபமாக சமாளிக்கும். அதற்கு அரசுடன் பொருளாதாரத்தின் அனைத்து அங்கத்தினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வார இறுதியை மக்கள் சந்தோஷமாக செலவிட பல காரணங்கள் உள்ளன. முதலில், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. நிறையப் பேர் தீபாவளி போனஸ் வாங்கியுள்ளனர். எனவே கையில் பணம் இருப்பவர்களுக்கு இந்த வார இறுதி கண்டிப்பாக சந்தோஷமானதாகவே இருக்கும்.
அப்படி கையில் பணம் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் செலவழித்தும், கொஞ்சம் சேமித்தும் வைக்க வேண்டும். நமது வங்கிகளின் சேமிப்புகள் பத்திரமாகவே உள்ளன. நமது வங்கிகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. முதலீடுகள் உறுதியாகவே உள்ளன.
சற்று ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் பங்குகள் உள்ளிட்டவற்றில் சேமிக்க முயற்சிக்கலாம். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் வங்கிகளில் முதலீடு செய்யலாம் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications