தொடர் மின்வெட்டு - 20 ஆயிரம் விசைத்தறிக் கூடங்கள் மூடல்
நாமக்கல்: தொடரும் மின்வெட்டைக் கண்டித்தும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆறரை மணி நேர மின்வெட்டைக் கண்டித்தும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்த றிக் கூடங்கள் மூடப்பட்டு போராட்டத்தில் குதித்துள்ளன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. ஏற்கனவே தொடர்ந்து மின்வெட்டு இருப்பதால் இவை பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில், ஆறரை மணி நேர மின்வெட்டை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது இவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் மாலையில் 4 மணி நேரத்திற்கு மின்சாரத்தையே பயன்படுத்தக் கூடாது என புதுக்க ட்டுப்பாடு விதித்திருப்பதும் இவர்களை அதிர வைத்துள்ளது.
அரசின் முடிவைக் கண்டித்தும், மின்வெட்டைப் போக்கக் கோரியும், குமாரபாளையம் பகுதியில் உள்ள 20 ஆயிரம் விசைத்தறிக் கூடங்களும் நேற்று மூடப்பட்டன. மேலும் குமாரபாளையத்தில் கடையடைப்பும் நடந்து. பள்ளிபாளையம் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications