பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே வாங்கல் குப்புச்சிபாளையம் என்ற இடத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
வாங்கல் குப்புச்சிபாளையம் என்ற இடத்தில் அங்கீகாரம் பெறாத பட்டாசுத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தீபாவளியையொட்டி பட்டாசு தயாரிப்பு முழுவேகத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அங்கு நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இந்த கோர விபத்தில் மாராயி (40), விஜயன் (40) ஆகியோர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் வெடிக்காத நிலையில் இருந்த பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைத்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications