இன்று தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் இன்று (அக்.13) கூடுகிறது. தீவிரவாத தாக்குதல்கள், சிறுபான்மையினர் மீதான பஜ்ரங் தளத்தின் தாக்குதல் குறித்து அனல் பறக்கும் விவாதம் நடைபெற உள்ளது.
பிரதமர் தலைமையில் இன்று நடைபெறவுள்ள தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் நாட்டின் முக்கிய நகரங்களில்ல் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களை பெரிதாக எழுப்ப பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் திட்டமிட்டுள்ளனர். அதேபோல, பஜ்ரங்தளத்தின் கர்நாடகம், ஒரிசா மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலை கிளப்ப காங்கிரஸ் தரப்பு முதல்வர்கள் தயாராக உள்ளனர்.
இவை தவிர அமர்நாத் நில விவகாரம் உள்ளிட்ட இதர பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மதக்கலவரம், தீவிரவாத ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த கூட்டத்தையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications