புலிகளை அழிக்க இந்தியா ஆதரவு! - பாசில் ராஜபக்ஷே

இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் குதிக்கத் தயாராகி வரும் தமிழ் மக்களுக்கு பாசில் ராஜபக்ஷேவின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையின் பிரபல நாளிதழுக்கு பாசில் ராஜபக்ஷே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலையை இலங்கை அரசு பரிசீலிக்கும் என்று அதிபர் மஹிந்தா ராஜபக்சே உறுதி அளித்துள்ளார். அவரை சமீபத்தில் சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத்திடம் உறுதி அளிக்கப்பட்டது.
புலிகளை அழிக்கும் எங்களின் நடவடிக்கையில் சில நட்பு நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது. அதிலும் அண்டை நாடான இந்தியாவின் ஆதரவு பெரும் சக்தியாக உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா அதிகபட்ச ஆதரவை எங்களுக்கு அளித்து வருகிறது.
புலிகள் மீதான ராணுவ நடவடிக்கைகளின்போது அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழர்களுக்கு உணவு, மருந்து, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பிடங்களை விட்டு வெளியேறி வரும் தமிழர்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
ஈழத் தமிழர் பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி இலங்கையை வலியுறுத்தும்படியும் இலங்கைக்கு இந்தியா உதவக் கூடாது என்றும் முதல்வர் கருணாநிதி பிரதமரை கேட்டுக் கொண்டார். திரையுலகினர், வர்த்தகப் பிரமுகர்கள் என பல தரப்பு மக்களும் தங்கல் உணர்வுகளை போராட்ட வடிவில் காட்ட முடிவெடுத்துள்ளனர்.
இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மன்மோகனும் உறுதியளித்தார். இந்நிலையில் இந்தியா தங்களுக்கு அதிகபட்ச ஆதரவை நல்கி வருகிறது என்று பாசில் ராஜபக்ஷே கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சேவை தாம் சந்தித்ததை உறுதி செய்துள்ள இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத், அப்போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து விரிவாக தெரிவிக்க மறுத்து விட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications