புதுவை: 20ம் தேதி குண்டர் தடுப்பு சட்ட மசோதா
புதுச்சேரி: புதுச்சேரியில் குண்டர் தடுப்புச் சட்டத்தை கொண்டு வர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. வரும் 20ம் தேதி நடக்க உள்ள சட்டமன்ற கூட்டத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் குண்டர் தடுப்புச் சட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தச் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கடந்த நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து முதல்வர் வைத்திலிங்கம் தலைமை யில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் வைத்திலிங்கம் கூறுகையில், புதுச்சேரி சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. அலுவல்களை பொறுத்து இக்கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று அப்போது முடிவு செய்யப்படும்.
இக்கூட்ட தொடரில் குண்டர் தடுப்புச் சட்டம் மசோதா தாக்கல் செய்யப்படும். தமிழகம், ஆந்திரா, கேரளம் உட்பட 14 மாநிலங்களில் இந்த குண்டர் தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது.
புதுச்சேரிக்கு இந்தச் சட்டம் தேவை என்று கருதியே அமல்படுத்த உள்ளோம். புதுச்சேரியில் கடுமையான சட்டங்கள் இல்லை என்பதால் தமிழக பகுதியில் இருந்து குற்றவாளிகள் புதுச்சேரியில் வந்து தங்குவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் புதுச்சேரியில் குண்டர் தடுப்பு சட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளோம்.
இந்த சட்டம் 1999ம் ஆண்டே புதுச்சேரியில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்பு கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.
புதுச்சேரியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வருவதும், ஒரு கொலைக்கு பழிவாங்க மற்றொரு கொலை நடப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்த சட்டத்தை அமல் செய்வதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்திலும் இதற்கு ஆதரவு இருந்தது. எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லை. சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றுதான் கூறினார்கள். எனவே பாதுகாப்பு கருதிதான் இதனை நடைமுறைபடுத்த உள்ளோம் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications