சாலை விபத்து: கணவர் பலி, நீதிபதி கவலைக்கிடம்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் காரில் வந்த பெண் நீதிபதியின் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெண் நீதிபதி படுகாயம் அடைந்தார்.
சென்னை 6வது டிவிஷன் சிவில் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி வருபவர் மீனாட்சி (42). இவரது கணவர் பழனியப்பன் (50).சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இருவரும் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு கார் மூலம் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் மீது எதிரே வந்த அரசு பேருந்து பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் நீதிபதி மீனாட்சியும், அவரது கணவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பழனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீதிபதி மீனாட்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications