தன் பிறந்த நாளுக்காக கைதிகளை விடுதலை செய்தவர் ஜெ!-கருணாநிதி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 7 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த 1405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டது குறித்து ஒரு மாதம் கழித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளின் துணையோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க செய்யப்படும் முயற்சி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகள் விடுதலை பற்றி ஏற்கனவே நான் விளக்கம் அளித்த பிறகும், ஒரு மாதம் கழித்து ஜெயலலிதா மீண்டும் அந்த பிரச்சனையை கிளப்பியுள்ளார்.
புகழ்பெற்ற மறைந்த தலைவர்களின் பிறந்தநாளையொட்டியோ, சில முக்கிய நிகழ்வுகளையொட்டியோ சிறையில் நீண்ட காலம் இருப்போரை விடுதலை செய்வது திமுக ஆட்சியில் புதிதாக செய்யப்படும் காரியமல்ல.
இன்னும் சொல்லபோனால் யாருமே செய்யாத காரியமாக ஜெயலலிதா, தான் முதலமைச்சராக இருந்தபோது தன் பிறந்தநாளையொட்டியே 1992ம் ஆண்டு 230 பேரையும், 1993ம் ஆண்டு 132 பேரையும், 1994ம் ஆண்டு 163 பேரையும் விடுதலை செய்தார்.
அவரது ஆட்சி காலத்தில் அண்ணா பிறந்தநாளுக்காக யாரும் விடுதலை செய்யப்படவில்லை.
கட்சி பேதமில்லை!
ஆனால், திமுக ஆட்சி காலத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி, ஆண்டுதோறும் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு அண்ணாவின் நூற்றாண்டு என்பதால் ஒரு சிறப்பு நேர்வாக 7 ஆண்டுகாலம் சிறையில் இருந்த ஆயுள் கைதிகளை திமுக அரசு விடுதலை செய்துள்ளது.
இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக ஒரு முடிவெடுத்து விடுதலை செய்யும்போது யார் எந்த கட்சி என்று பார்த்து விடுதலை செய்ய முடியாது. ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் என்பதற்காக தனிவிதிமுறையை பயன்படுத்த முடியாது.
ஜெயலலிதா தன் ஆட்சி காலத்தில் தன் பிறந்தநாளுக்காக கைதிகளை விடுவித்த போது கட்சி பார்த்தா விடுவித்தார்.
மேலும், கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் இதேபோல இடது முன்னணி அரசுகள் பலரை விடுதலை செய்துள்ளனர். எனவே, கைதிகளை விடுதலையில் உள்நோக்கம் கற்பிப்பது நல்லதல்ல என்று கூறியுள்ளார்
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications