முந்திரி வியாபாரியை தாக்கி ரூ.5 லட்சம் கொள்ளை
பண்ருட்டி: பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரியை தாக்கி அவரிடம் இருந்த 5 லட்ச ரூபாயை மர்ம கும்பல் கொள்ளையடித்தது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் அருகே உள்ளது புறங்கனியைச் சேர்ந்தவர் சூடாமணி (52), முந்திரி வியாபாரி.
இவர் சென்னையில் உள்ள வியாபாரிகளுக்கு முந்திரி விற்று வருகிறார். வாரா வாரம் சனிக்கிழமை சென்னை சென்று பணம் வசூலித்து வருவார். அதேபோல கடந்த நேற்று முன்தினம் வியாபாரிகளிடம் இருந்து ரூ. 5.05 லட்சத்தை வசூலித்துக் கொண்டு சென்னையில் இருந்து புறப்பட்டார்.
நேற்று காலை காடாம்புலியூரில் இறங்கி வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 3 பேர் சூடாமணியை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்த சூடாமணி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications