மீண்டும் வன்முறை: கந்தமாலில் சிஆர்பிஎப் காவலர் கொலை
கந்தமால்: கந்தமாலில் மத்திய ரிசர்வ் படை போலீஸ் ஜவான் ஒருவரை கிராம மக்கள் வெட்டி கொலை செய்தனர். இதனால் ஒரிஸ்ஸாவில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ஒரிஸ்ஸா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மதக் கலவரம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக கந்தமால் மாவட்டத்தில் நடந்து வரும் இந்து-கிருஸ்துவர் மத மோதல்கள் நாட்டையே உலுக்கியுள்ளன. அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக அங்கு சற்று அமைதி நிலவி வருகிறது.
இந்நிலையில் கந்தமாலில் சிஆர்பிஎப் ஜவான் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சிஆர்பிஎப்பின் 175 பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த பக்ஷிஷ் சிங் கெளஹாத்தியில் இருந்து பாதுகாப்பு பணிக்காக கந்தமாலுக்கு வந்தார்.
ராய்கியா பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, கிராம மக்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவருடன் வந்த மற்றொருவர் பயங்கரமாக தாக்கப்பட்டார்.
கந்தமாலில் அமைதி திரும்பி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிஆர்பிஎப் டிஐஜி பி.கே.காமத் கூறுகையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக ஜவான் பக்ஷிஷ் சிங் கொலை செய்யப்படவில்லை. அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் அவரை கொலை செய்துவிட்டனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications