மலேரியா மாத்திரை-மாணவன் பலி: ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்
நெல்லை: பள்ளியில் வழங்கப்பட்ட மலேரியா மாத்திரையை சாப்பிட்ட மாணவன் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை உள்பட ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகிலுள்ள வடக்கு பூலங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்க ப்பள்ளியில் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 15 பேருக்கு கடந்த 10ம் தேதி நல்வாழ்வுத் துறையினர் மலேரியா காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளை வழங்கினர்.
தினமும் ஒரு மாத்திரை சாப்பிட அறிவுறுத்தப்பட்டு மாணவர்களுக்கு தலா 10 மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த மாத்திரையை சாப்பிட்ட மாணவன் செல்வகுமார் திடீரென இறந்தான். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுது.
விசாரணையில் அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டதால் செல்வகுமார் இறந்தது தெரியவந்தது. அதிக மாத்திரைகள் வழங்கியது தொடர்பாக பாவூர்சத்திரம் சுகாதார ஆய்வாளர் ராஜநயினார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் இவாஞ்சலின் கரிசலூர் பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஆசிரியர்கள் பிரபாகரன் நாயர், ஆண்டாள், முருகேசன் ஆகியோருக்கு அருகிலுள்ள பள்ளிக்கு மாற்றுப்பணி (டெபுடேஷன்) வழங்கப்பட்டது.
இதுகுறித்து தொடக்க கல்வி அலுவலர் மாரியப்பன் கூறுகையில், முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரில் மாற்று பணி வழங்கப்பட்டது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications