இளைஞரணி மாநாடு அரசியல் மாற்றத்தை ஏற்படு்ததும்: சுதீஷ்
வேலூர்: வரும் 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தேமுதிக இளைஞரணி மாநாடு தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளரும் விஜய்காந்தின் மச்சானுமான எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.
வேலூர் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் அரக்கோணத்தில் மாணவ, மாணவியர்களுக்கான இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மைய திறப்பு விழா நடைபெற்றது. மையத்தை எல்.கே.சுதீஷ் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலன் கருதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவின் பேரில் 60 இடங்களில் ரூ.1.5 கோடி செலவில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
ஒரு மணி நேரத்தில் 10 மாணவ, மாணவியர் வீதம் தினமும் 100 மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாநில முழுவதும் 6 ஆயிரம் பேருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி தரப்படுகிறது.
மக்களை ஏமாற்ற ஆட்சியாளர்கள் இலவச கலர் டி.வி. கொடுப்பது போல நாங்கள் இந்த கணினி பயிற்சி மையங்களை திறக்க வில்லை. மாணவ, மாணவியரின் வருங்காலத்தை கருதியே இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் திறக்கப்படுகின்றன.
தவிர, இளைஞர்கள் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தர தேமுதிக சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பி தகுதி அடிப்படையில் வேலை பெற்றுத் தருகிறோம். சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு ஆட்டோ வாங்குவதற்காக கடனுதவி அளிக்கப்படுகிறது.
வருகிற 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தேமுதிக இளைஞரணி மாநாடு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications