பெப்சி நிறுவனத்திலிருந்து 3,300 பணியாளர்கள் நீக்கம்!

உலகின் முதல் நிலை குளிர்பானத் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான பெப்சிகோ நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம், முன்பைவிட 9.5 சதவிகிதம் குறைந்துவிட்டது.
குறிப்பாக இந்தியாவைச் (சென்னை) சேர்ந்த இந்திரா நூயி பெப்சிகோ தலைவரான பிறகு லாப அளவு அதிகரிக்காமல் குறைந்த வண்ணம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்து. அமெரிக்காவில் பெப்சியின் விற்பனை பெருமளவு சரிந்துள்ளதாகவும் பெப்சி நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.
முந்தைய காலாண்டின் லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் கணிசமான பணியாளர்களைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை என முடிவு செய்த பெப்சி நிர்வாகம் நேற்று அதற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பெப்சி தலைவர் இந்திரா நூயி கூறுகையில், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் பெப்சி நிறுவன தயாரிப்புகளின் விற்பனையிலும் எதிரொலித்துள்ளன. சர்வதேச நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பெப்சி நிர்வாகம் எடுத்துள்ள சில முடிவுகளுள் இதுவும் ஒன்று..., எனக் கூறியுள்ளார்.
கடந்த இரண்டாவது காலாண்டில் பெப்சியின் நிகர வருமானம் 1.74 பில்லியன் டாலர்கள். ஆனால் இந்த காலாண்டில் அது 1.58 பில்லியன் டாலர்களாகக் குறைந்துவிட்டது. அடுத்த காலாண்டில் இந்த வருவாய் அளவு மேலும் குறைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவதாலேயே, பெப்சி இந்த அதிரடி முடிவை மேற்கொண்டுள்ளது.
மேலும் சில சிக்கன நடவடிக்கைகளை பெப்சி நிர்வாகம் அறிவிக்க உள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications