அபாய நிலையில் உலக பங்குச் சந்தைகள்!
நியூயார்க்: உலக பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் துவங்கியதிலிருந்தே எங்கும் 'சிவப்பு' மயம்தான்.
இரண்டு தினங்களுக்கு முன் ஓகோவென்று கொடிகட்டிப் பறந்த டோவ் ஜோன்ஸ் பங்குச் சந்தையில் இன்று மிக மோசமான சூழல் நிலவியது. இதுவரை இல்லாத அளவுக்கு பங்குகளின் விலை சரிந்தது. பங்குச் சந்தை புள்ளிகளும் கிடுகிடுவென குறைந்து முதலீட்டாளர்களின் இதயத் துடிப்பை அதிகரித்துள்ளது.
டோவ் ஜோன்ஸில் வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களுக்குள் 700 புள்ளிகள் சரிந்தன. வர்த்தக நேர முடிவில் 733 புள்ளிகள் சரிந்து (7.87 சதவிகிதம்) 8,577.91-ல் நிலைபெற்றது.
1987, அக்டோபர் 26-ம் தேதிக்குப் பிறகு இவ்வளவு மோசமான வர்த்தகத்தை இப்போதுதான் சந்திக்கிறது டோவ் ஜோன்ஸ்.
அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாக அந்நாட்டு அரசே ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, பங்குச் சந்தையும் சரிவுக்குள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
நிக்கி அவுட்!
ஆசியாவின் முக்கிய பங்குச் சந்தை நிக்கியிலும் (ஜப்பான்) இன்று சிவப்பு மயம்தான். 986 புள்ளிகள் சரிந்து 8562 புள்ளிக்கு வந்துவிட்டது. உலகப் பொருளாதார சரிவின் பலனை இப்போது நாங்களும் அனுபவிக்க வேண்டியுள்ளது என்கிறார்கள் அந்நாட்டு பொருளியல் நிபுணர்கள் சலித்துப்போய்.
லத்தீன் அமெரிக்காவின் இபோவ்ஸ்பா பங்குச் சந்தையில் இன்று ஒரே நாளில் 11.4 சதவிகிதம் அதாவது 3500 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களை அதிர வைத்தது.
மெக்ஸிகோ, அர்ஜன்டைனா போன்ற நாடுகளின் சந்தைகளிலும் இன்று கடும் சரிவு ஏற்பட்டது.
ஆசிய பங்குச் சந்தைகளில் ஹாங்காங்கின் ஹாங்க் செங் கடும் சரிவுக்குள்ளானது. இன்று ஒரே நாளில் 834 புள்ளிகள் சரிந்தன. தென் கொரியா, சீனா போன்ற நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் இன்று இதே நிலை நீடித்தது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications