ரேபரேலி தொகுதிக்குள் நுழைய தடையா?-மாயாவதி பதிலடி
லக்னோ: ரேபரேலி ரயில் கோச் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்பப் பெற்ற விவகாரத்தை வைத்து சோனியா காந்தி அரசியல் செய்கிறார். வருகிற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற அவர் மேற்கொண்டிருக்கும் அரசியல் சதி இது என்று குற்றம் சாட்டியுள்ளார் உபி முதல்வர் மாயாவதி.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் சொந்த தொகுதி. அங்கு ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் ஆர்ஜிதப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் பூமி பூஜை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
சோனியா ஆவேசம்:
முன்னதாக, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, அந்த தொழிற்சாலைக்கு அளிக்கப்பட்டு இருந்த நில ஒதுக்கீட்டை முதல்வர் மாயாவதி ரத்து செய்தார்.
இந்த வழக்கில் பூமி பூஜைக்கு கோர்ட்டும் தடை விதித்து இருந்தது. அத்துடன், பதட்ட நிலை காரணமாக ரெயில் பெட்டி தொழிற்சாலை அமையும் பகுதியான லால்கஞ்ச் நகரில் மாநில அரசு சார்பில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
பூமி பூஜை ரத்து செய்யப்பட்டாலும், திட்டமிட்டபடி சோனியாகாந்தி ரேபரேலி தொகுதியில் நேற்று முன்தினம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அங்கு சோனியாவை திரளான தொண்டர்கள் வரவேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய சோனியா, எனது தாய்வீடு ரேபரேலி. இதில் நுழைவதற்கு தடை விதிப்பதா? என்றார் ஆவேசமாக. ரேபரேலி தொகுதி மக்களின் நன்மைக்காக ஜெயிலுக்கு செல்லவும் தயார் என்று சோனியா அறிவித்தார்.
மாயாவதி பதிலடி:
இந்நிலையில், சோனியாவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார் மாயாவதி. அவர் கூறியதாவது:
ரயில் பெட்டி தொழிற்சாலை அமைய இருந்த லால்கஞ்ச் நகரில் பதட்ட நிலை இருந்ததால் அங்கு மட்டும் தான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஏதோ அவரை ரேபரேலி தொகுதிக்குள் நுழைவதற்கே தடை விதிக்கப்பட்டது போல் சோனியா நாடகம் ஆடுகிறார். இது வெறும் அரசியல் ஸ்டன்ட்.
ஜெயிலுக்கு போகத் தயார் என்று சோனியா அறிவித்து இருக்கிறார். மாநில அரசுக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்த முடிவு செய்திருந்தால் ஜெயிலுக்கு போக வேண்டும் என்ற அவருடைய ஆசை நிறைவேறி இருக்கும். அவருடைய சாலையோர சுற்றுப் பயணத்தை தடுத்து சோனியாவை கைது செய்து இருக்க முடியும்.
ஆனால், பதட்ட நிலை இருப்பதால் பொதுக் கூட்டத்தில் பேச வேண்டாம் என்று மட்டுமே சோனியாவிடம் கேட்டுக்கொண்டோம். அந்த மாவட்டத்தின் வேறு எந்த பகுதியிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆனால், காங்கிரசார் வேண்டுமென்றே அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இதை முறியடிக்க ரேபரேலியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசப் போகிறேன்.
உண்மையிலேயே உபி மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணம் சோனியாவுக்கோ அவரது தலையிலான காங்கிரஸ் அரசுக்கோ இருந்தால் ஒட்டுமொத்த உபி மக்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். கிழக்கு உபியிலோ, புந்தேல்கண்டிலோ இம்மாதிரி தொழிற்சாலைகளைக் கொண்டு வரலாமே.
இந்த ரயில்பெட்டி தொழிற்சாலை எப்போதோ இங்கு வந்திருக்க வேண்டும். ரேபரேலி திட்டத்துடன் அறிவிக்கப்பட்ட சாப்ரா உள்பட மற்ற தொழிற்சாலைகளில் எல்லாம் முன்னதாகவே பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால் பாராளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் லாபம் கருதி இப்போது பூமி பூஜை நடத்துவதாக அறிவித்து உள்ளனர்.
மேலும் ரேபரேலி மற்றும் ராகுல் தொகுதியான அமேதி ஆகிய இரு தொகுதிகளின் நலன் மட்டுமே சோனியாவுக்கு முக்கியமாக தெரிகிறது. மற்ற தொகுதிகளை பற்றி அவருக்கு கவலை இல்லை. இது அவரது திட்டமிட்ட அரசியல் சதி, என குற்றம் சாட்டியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications