ரயில் இ-டிக்கெட்: அடையாள அட்டை விதி தளர்வு
டெல்லி: ரயில்களில் இ-டிக்கெட் மூலம் முன் பதிவு செய்த பயணிகள், பயணத்தின்போது குறிப்பிட்ட அடையாள அட்டையைத் தான் காட்ட வேண்டும் என்ற விதியை ரயில்வேத் துறை தளர்த்தியுள்ளது.
இன்டர்நெட் மூலம் ஆன் லைனில் இ-டிக்கெட் புக் செய்யும்போது பேன் கார்ட், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, மத்திய, மாநில அரசால் தரப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டு, இ-டிக்கெட் வாங்கலாம்.
இதில் எந்த அட்டையை பயணி குறிப்பிட்டாரோ அதே அடையாள அட்டையைத் தான் பயணத்தின்போது காட்ட வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, டிக்கெட் வாங்கும்போது குறிப்பிட்ட அட்டையைத் தான் கட்டாயம் பயணத்தின்போது காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேறு ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டினாலே போதும் என ரயில்வே அறிவித்துள்ளது.
பயணத்தின்போது மத்திய, மாநில அரசுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றைக் காட்டலாம். டிக்கெட் வாங்கும்போது குறிப்பிட்ட அட்டையைத் தான் காட்ட வேண்டும் என்பதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ட்ரா சைட் பெர்த்தால் தொந்தரவு:
இதற்கிடையே எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள சைடு பெர்த்தால் (படுக்கைகள்) பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
2ம் வகுப்பு பெட்டிகளில் சைட் பெர்த் முதலில் கீழே ஒன்று, மேலே ஒன்று என இரண்டு தான் இருந்தன. ஆனால், இதை 3 பெர்த்களாக மாற்றி வருகின்றனர்.
ஏற்கனவே ரயிலின் பக்கவாட்டில் உயரம் கம்மி. இதில் 3 பெர்த் இருப்பதால் பயணிகள் கொஞ்சம் கூட அசைய இடமில்லாமல் ஒருவருக்கு மேல் ஒருவர் என அடுக்கப்படுகின்றனர்.
இதற்கு பயணிகளிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications