பிரதமருடன் தொலைபேசியில் ராஜபக்சே பேச்சு

அப்போது தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அதிபரிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
இத்தகவலை இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது நடக்கும் தாக்குதல்களில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதனைத் தடுக்கக் கோரியும், இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக் கோரியும் தமிழகமே போர்க் கோலம் பூண்டு நிற்கிறது. தமிழக எம்பிக்கள், மத்திய அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்து வருகிறார்கள்.
இன்று முதல் நவம்பர் 1ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை தமிழக அரசும், பிற அமைப்புகளும் அறிவித்துள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இதுகுறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் இலங்கை அதிபர் ராஜபக்சே பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு தனது நாட்டின் நிலைமை குறித்து விளக்கினார்.
அப்போது இந்தியாவில் குறிப்பாக தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பைக் குறிப்பிட்டு, உடனடியாக ராணுவத் தாக்குதலை நிறுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
போர் நடவடிக்கைகளைக் கைவிட்டு, உடனடியாக சுமுக தீர்வுக்கு முயற்சி மேற்கொள்ளுங்கள் என்று பிரதமர் அவரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications