தாமிபரணியில் வெள்ளம்: வீடுகளுக்குள் நீர் புகுந்தது!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: மழை தொடர்ந்து பெய்து வருவதால் தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளும் நிரம்பி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட், சேவியர் காலனி, அன்பு நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
தொடர் மழை காரணமாக காட்டாற்று பகுதிகளில் இருந்து வந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வெள்ள நீரை வடிய வைக்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால் தென் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications