உயர் கல்விக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை: எம்பி
தென்காசி: கல்விக்காக மத்திய அரசு 6 சதவீதம்தான் செலவு செய்கிறது. இதனால் உயர் கல்வி, தொழில்கல்விக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி அப்பாதுரை கூறினார்
அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரியில் எம்பி தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
கல்லூரி ஆட்சி மன்ற குழு தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். அடிக்கல்லை நாட்டி எம்பி அப்பாத்துரை பேசியதாவது:
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை 49 பள்ளி, கல்லூரிகளுக்கு வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.3 கோடியே 63 லட்சம் நிதி வழங்கியுள்ளேன். இந்தியாவில் 20,000ம் பள்ளிகளில் ஆசிரியரே கிடையாது. 19,000 பள்ளிகளில் மாணவர்களே கிடையாது.
வடமாநில எம்பிக்கள் 20 சதவிதம் கமிஷன் பெற்றுக் கொண்டு நிதியை கொடுத்து வருகின்றனர். இதை கண்காணிக்க தற்போது குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கல்விக்காக மத்திய அரசு 6 விழுக்காடுதான் செலவு செய்கிறது. இதனால் உயர் கல்வி, தொழில்கல்விக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பீடி தொழிலாளர்களுக்காக கல்வி உதவித் தொகை மற்றும் பிற உதவி தொகையாக ரூ.14.25 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications