'கோத்ரா': 134 பேர் மீதான பொடா வழக்கு ரத்து-உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி: கோத்ரா ரயி்ல் தீ வழக்கில் 134 பேர் மீது தீவிரவாத எதிர்ப்பு சட்டமான பொடா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோத்ராவில் 2002ம் ஆண்டு கர சேவகர்கள் சென்ற ரயிலில் ஏற்பட்ட தீயில் 59 அப்பாவி பக்தர்கள் பலியாயினர். இதையடுத்து குஜராத்தில் நடத்த பயங்கர மதக் கலவரத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந் நிலையில் ரயிலுக்கு தீ வைத்ததாகக் கூறி 134 முஸ்லீம்களை குஜராத் மாநில அரசு பொடா சட்டத்தில் கைது செய்தது. இதில் 83 பேர் எந்தவித விசாரணையும் இன்றி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர்களை பொடா சட்டத்தில் கைது செய்தது செல்லாது என மத்திய பொடா மறுபரிசீலனைக் கமிட்டி உத்தரவிட்டது.
ஆனாலும் அவர்களை தொடர்ந்து குஜராத் மாநில அரசு சிறையில் வைத்துள்ளது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக சிறையில் உள்ள அவர்கள், தங்கள் மீதான பொடா வழக்குகளை கமிட்டி ரத்து செய்துவிட்டதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அங்கு அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன், நீதிபதி தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள்,
பொடா மறுபரிசீலனைக் கமிட்டியின் பரிந்துரைகளை மாநி்ல அரசும், விசாரணை நீதிமன்றமும் ஏற்க வேண்டும். இந்த கமிட்டியின் பரிந்துரைகள் தன்னைக் கட்டுப்படுத்தாது என்ற குஜராத் அரசின் வாதத்தை நிராகரிக்கிறோம்.
இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தி்ன் கீழ் தான் விசாரணை நடத்த முடியும்.
பொடா கமிட்டியின் பரிந்துரைகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வேண்டுமானால் குஜராத் அரசு மேல் முறையீடு செய்யலாம். அங்கு அந்தப் பரிந்துரைகள் ரத்து செய்யப்பட்டால் தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு்க்க முடியும் என்று தீர்ப்பளித்தனர்.
இதன்மூலம் 83 பேரும் ஜாமீனில் வெளியே வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இடதுசாரிகள் வரவேற்பு:
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை இடதுசாரிக் கட்சிகள் வரவேற்றுள்ளன.
பொடா சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராகவே முழுக்க முழுக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. குஜராத்தில் இந்த சட்டத்தின் கீழ் சிறுபான்மையின குழந்தைகள் கூட கைது செய்யப்பட்டனர். இந் நிலையி்ல் இந்தத் தீர்ப்பு சிறுபான்மையினருக்கு நம்பி்க்கையையும் புதிய ஒளியையும் தந்துள்ளது.
பொடா எந்த அளவுக்கு குஜராத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து முழு அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக் கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications