கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கேரள மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுடலையாண்டி தலைமையில் போலீசார் தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை தாலுகா பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது செங்கோட்டையிலிருந்து கேரள மாநிலம் அச்சன்கோவில் செல்லும் பேருந்தில் 6 மூடை ரேசன் அரிசியை ஏற்றிய விசுவநாதபுரம் இசக்கி தேவர் என்பவரை கைது செய்து 6 மூடை ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் தேன்பொத்தை அருகே வாகன சோதனை நடத்தியபோது டிவிஎஸ் ஸ்கூட்டியில் 4 மூடை ரேசன் அரிசியை கடத்தி வந்த சுந்தரராஜன் என்பவரையும் கைது செய்தனர்.

அரிசி, மொபைட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து நெல்லை உணவு கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு கொண்டு வந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+