உத்தப்புரம் விவகாரம்-மதுரையில் உண்ணாவிரதம் !
மதுரை: உத்தப்புரம் மக்களின் உரிமைகளை நிலைநிறுத்தக் கோரி மதுரையில் நவம்பர் 5 -ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான உத்தப்புரம் தலித் மக்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவரை அகற்றிய பின்னரும் தலித் மக்கள் அச்சமின்றி அப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, இப் பாதையை அவர்கள் அச்சமின்றி பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை துரித வேகத்தில் எடுக்க வேண்டும்.
அண்மையில் காவல்துறை நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
பொய் வழக்கு போட்டு மூலம் சிறையில் உள்ள தலித் மக்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். இந்த தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும்.
மேலும் உத்தப்புரம் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் செல்லும் கழிவு நீர் சாக்கடைக்கு மூடி போடவும், பேருந்து நிழற் குடை அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 5ம் தேதி மேலமாசி வீதி- வடக்குமாசி வீதி சந்திப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென் மாவட்டக் குழுக்களின் சார்பில் இளைஞர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications