மதுரையில் மூன்றரை வயது பெண் குழந்தை நரபலி?
மதுரை: மதுரை மாவட்டம் புது தாமரைப்பட்டி கிராமத்தில் மூன்றரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் புது தாமரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வைகை மகளிர் குழுவினர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஜவஹரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த மாதம் 8ம் தேதி எங்களது உறுப்பினரான உஷாவின் மூன்றரை வயது குழந்தை கோபிகா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணவில்லை.
அக்கம் பக்கத்தில் தேடிய போது குழந்தை கிடைக்கவில்லை. இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் செய்தோம்.
மறுநாள் காலை ஊரின் சிறிது தூரத்தில் உள்ள பெரிய கால்வாயில் தலை, உடல் முழுவதும் தாக்கப்பட்ட நிலையில் கோபிகா பிணமாக கிடந்தாள்.
கோபிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஊர் பொது மக்கள் அங்குள்ள ஒயின்ஷாப் முன்பு பிணத்துடன் மறியல் செய்தோம்.
அதன் பின்பு அங்கு வந்த காவல்துறை கடையை சீல் வைத்தர். அதன் பின்பு கோபிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந் நிலையில் இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கில், உண்மை குற்றவாளியை தப்பவைக்க ஒரு போலி நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோபிகாவை நரபலிக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
எனவே இந்த வழக்கில் உண்மை குற்றவாளியை தப்பவிடாமல் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக உறுதி்யளித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications