கனமழை: மனித சங்கிலி போராட்டம் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகள் வெள்ளக்காடாகியுள்ளன. சென்னையில் விடிய விடிய மழை பெய்தது.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெறுவதாக இருந்த மனித சங்கிலிப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்தும், இப்பிரச்சினையில் இந்தியா தலையிட வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பல முனை போராட்டங்களைத் தொடங்கியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பாரிமுனை முதல் செங்கல்பட்டு வரை இந்த மனி சங்கிலிப் போராட்டத்தை மிக பிரமாண்டமான அளவில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தை முதல்வர் கருணாநிதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே இன்று மாலை 3 மணிக்குத் தொடங்கி வைப்பார், 5 மணி வரை போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கன மழை காரணமாக இப்போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்குப் பதில் 24ம்தேதியன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications