பங்கு வர்த்தக நஷ்டம்-புரோக்கரின் சோக முடிவு
மும்பை: பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட திடீர் சரிவால் ஏற்பட்ட நஷ்டத்தைத் தாங்க முடியாத பங்குத் தரகர் ஒருவர் தன் கர்ப்பிணி மனைவியையும் கொன்று தன் உயிரையும் மாய்த்துக் கொண்டார்.
மும்பையின் கண்டிவலி பகுதியில் வசித்தவர் பரக் தன்னா. கடந்த சில மாதங்களாக பங்குகள் விலை உச்சத்தில் இருந்ததால் இவர் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையில் தனது வருவாய் முழுவதையும் முதலீடு செயதிருந்தார்.
ஆனால் கடந்த சில வாரங்களாக சர்வதே நிதி நெருக்கடிகளால் இந்திய பங்குச் சந்தைகள் பெரும் தள்ளாட்டத்துக்குள்ளாகியுள்ளன. இதனால் பல லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.
இப்படி பணத்தைத் தொலைத்தவர்களில் பரக் தன்னாவும் ஒருவர். இந்த தொடர் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல், போலீசுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் கர்ப்பிணி மனைவியையும் கொன்றுவிட்டு, தன் உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார்.
பங்குச் சந்தையில் தனக்கு ஏற்பட்ட நஷ்டமே இந்த முடிவுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இருவருக்கும் மூன்றாண்டுகளுக்கு முன்புதான் திருமணமானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications