கொடைக்கானல்: 3 மாதா சிலைகள் உடைப்பு-பதட்டம்

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: கொடைக்கானலில் 3 மாதா சிலைகள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

கொடைக்கானல் செண்பகனூர் தைக்கால் பாத்திமா குருசடி என்ற இடத்தில் 90 ஆண்டுகளுக்கு முன்னால் ரோம் நகரில் இருந்து பாத்திமா மாதா சிலை கொண்டு வரப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் மாதா சிலையை வழிபட்டு வந்தனர்.

அதுபோல் கார்மேல்புரம் புனித சூசையப்பர் ஆரம்பப்பள்ளி அருகே அமலோர்ப்பவ மாதா, ஆரோக்கிய மாதா சிலைகள் உள்ளன.

2 நாட்களுக்கு முன்பு இரவு மர்ம மனிதர்கள் இந்த 3 மாதா சிலைகளையும் உடைத்து சேதப்படுத்தினார்கள். மேலும் சிலுவையையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்தனர்.

சேதப்படுத்தப்பட்ட மாதா சிலைகள் மற்றும் சிலுவையை செண்பகனூர் கிறிஸ்தவ பாதிரியாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிரமாக ரோந்து சுற்றி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+