தமிழர்களுக்கு மட்டும் ஒரு நியாயமா?-பால் தாக்கரே

சிவசேனை கட்சி பத்திரிகையான சாம்னாவில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில்,
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலனை காக்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் உணர்வோடு நடந்து கொள்கின்றன.
இலங்கை தமிழர் பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்று விடுவோம் என்று திமுக அரசு மிரட்டல் விடுத்துள்ளது.
தமிழக கட்சிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாங்கள், மராத்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினால் எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
பிராந்திய உணர்வோடு நடந்து கொள்வதாக முத்திரை குத்தி விமர்சனம் செய்கின்றனர். மத்தியில் ஆட்சி அமைக்கும் அரசுகள் எப்போதுமே மராத்தியர் நலனில் பாரபட்சமாக நடந்து கொள்கின்றன.
இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. மராத்தியர்களின் நலன் காக்க ஆதரவாக இருப்பதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications